( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் அதிசிறப்பு அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிந்தக அபேவர்த்தன இடமாற்றம் பெற்றுச் சென்கின்றார். அவருக்கு நாளை (11) புதன்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் நடைபெறவிருக்கிறது.
அதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபர் மங்கள விக்ராமாராச்சி, 2014 களில் மகா ஓயா மற்றும் கல்முனை பிரதேச செயலாளராக சேவையாற்றியிருந்தார்.
நாளை மறுநாள் (12) வியாழக்கிழமை அவர் பதவியை பொறுப்பேற்கும் வைபவம் நடைபெறவிருக்கிறது.
மத்துகமவைச் சேர்ந்த இவர் சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்லூரியின் (C.W.W. Kannangara College) பழைய மாணவராவார்.
மோட்டார் வாகனத் துறையின் ஆணையாளராகத் திறம்படச் செயலாற்றிய ஒரு சிறந்த நிர்வாகியான இவர், தற்போது அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

