Ads Area

சவூதி அரேபியா: இகாமா காலாவதியானால் 'பைனல் எக்சிட்' விசாவை ரத்து செய்ய முடியுமா? ஜவாசாத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் இகாமா (Iqama) காலாவதியாகி இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கான இறுதி வெளியேறுதல் (Final Exit Visa) விசாவை ரத்து செய்ய முடியுமா என்பது குறித்து ஜவாசாத் (Jawazat) முக்கிய விளக்கமளித்துள்ளது.


சமூக வலைதளமான 'X' தளத்தில் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜவாசாத் நிர்வாகம், இதற்கான நடைமுறைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது.


இகாமா செல்லுபடியாகும் நிலை: 


ஒரு தொழிலாளியின் பைனல் எக்சிட் விசாவை ரத்து செய்ய வேண்டுமானால், அந்தத் தொழிலாளியின் இகாமா (Residence Permit) கட்டாயம் செல்லுபடியாகும் நிலையில் (Valid) இருக்க வேண்டும். இகாமா காலாவதியாகி இருந்தால் விசா ரத்து செய்யும் செயல்முறையை மேற்கொள்ள முடியாது.


ரத்து செய்யும் முறை: 


இகாமா நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், முதலாளி (Employer) தனது அப்சர் பிசினஸ் (Absher Business) அல்லது முகீம் (Muqeem) தளம் வழியாக பைனல் எக்சிட் விசாவை ரத்து செய்யலாம்.


இகாமாவை புதுப்பித்தல்: 


ஒருவேளை இகாமா காலாவதியாகி இருந்தால், முதலில் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தி அப்சர் அல்லது முகீம் தளம் வழியாக இகாமாவைப் புதுப்பிக்க வேண்டும். அதன் பின்னரே பைனல் எக்சிட் விசாவை ரத்து செய்ய முடியும்.


பொதுவாக, ஒருவருக்கு பைனல் எக்சிட் விசா வழங்கப்பட்டால், அவர் அந்த விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார். 






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe