Ads Area

போதைப்பொருள் அரக்கனை வேரறுப்போம் சம்மாந்துறை மலையடிக்கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு!l

சமூகத்தின் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலையடிக்கிராமம்-01 பிரிவில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (21) நடைபெற்றது. 


சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், மலையடிக்கிராமம்-01 கிராம உத்தியோகத்தர் ஏ.என். ரிஸ்னா பானு தலைமையில் நடைபெற்றது. 


சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் நேரடி ஆலோசனையின் கீழ், பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். இக்ராம் இந்நாட்டிற்கு அவசியமான இந்த விழிப்புணர்வு நிகழ்வை மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தார். 


இந்நிகழ்வில் சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்.


தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வட-கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம். ரசாட் அவர்கள் பிரதம வளவாளராகப் பங்கேற்று, போதைப்பொருட்களால் ஏற்படும் உடல், உள மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து இளம் தலைமுறையினரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் விரிவான விளக்கங்களை வழங்கினார். 


இந் நிகழ்வில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன்,சமூர்த்தி முகாமையாளர்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மக்களை விடுவித்து, ஆரோக்கியமானதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வு கிராம மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe