Ads Area

சாய்ந்தமருது உணவகங்களில் உண்ணப் பொருந்தா உணவுகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

 பாறுக் ஷிஹான்.


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் தொடர்ச்சியாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.


இப்பரிசோதனைகளின் போது மனித நுகர்வுக்குப் தகுதியற்ற உணவுப்பொருட்கள் கண்டறியப்பட்டதுடன்,  அவை பொதுமக்களின் நலனைக்கருத்திற்கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.


மேலும், விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள்,  உணவுப்பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது  தொடர்பில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அறிவுறுத்தியுள்ளார்.


மேற்குறித்த பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன் வழிகாட்டலில் நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe