சம்மாந்துறை அன்சார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளின் மருத்துவச் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிதாக சேவையில் இணைந்துகொண்ட 09 வைத்தியர்கள் உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இது தொடர்பான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புதிய வைத்தியர்களுக்கான சேவை நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி.மசூத், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்:
| வைத்தியசாலை | நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் |
| நிந்தவூர் ஆதார வைத்தியசாலை | 02 |
| திருக்கோவில் ஆதார வைத்தியசாலை | 02 |
| சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை | 01 |
| இறக்காமம் வைத்தியசாலை | 01 |
| அன்னமலை வைத்தியசாலை | 01 |
| தீகவாபி வைத்தியசாலை | 01 |
| உல்லை வைத்தியசாலை | 01 |




