ஆசியா அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் I-Road திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி, பழைய வளத்தாப்பிட்டி, பவளவெளி, இஸ்மாயில்புரம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 4.66 கிலோமீற்றர் நீளமான வீதி காபட் வீதியாக செப்பனிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தாஹிரா வித்தியாலத்திற்கு முன்பாக செல்லும் பள்ளிவாசல் குறுக்கு வீதியில் காணப்படும் தனிநபர் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
>இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ பதில் தவிசாளர் வீ.வினோகாந்த் அவர்களின் தலைமையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட பொறியாளர் லோகதாஸ், வளத்தாப்பிட்டி-01 கிராம சேவக உத்தியோகத்தர் எம். உதயராஜன், வளவு உரிமையாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை
0672030800




