Ads Area

சம்மாந்துறை சலாம் பள்ளி எல்லை வீதியினை தனது சொந்த நிதியில் புனர்நிர்மாணம் செய்த பிரதேச சபை உறுப்பினர் பஹ்மி சுலைமான்.

 மஜீட். ARM 


சம்மாந்துறை சலாம் பள்ளி எல்லை வீதியானது நீண்ட காலமாகப் அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இது தொடர்பாகப் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தீர்வு கிடைப்பதில் தாமதம் நிலவி வந்த நிலையில் மக்களின் இந்த நீண்ட காலப் பிரச்சினையை நேரில் கண்டறிந்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எஸ்.எல்.எம். பஹ்மி சுலைமான் அவர்கள்,  தனது சொந்த நிதியினை  ஒதுக்கீடு செய்து இந்த வீதியைப்  நேற்று (20) திகதி புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.


இப்பணிக்கு வலுசேர்க்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான நயீம், பசீல் அமீர் அப்னான் , ஆசீக், காலித் மற்றும் றிஸ்விக்கான் ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக இருந்து பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.


அத்தோடு, இவ்வீதிக்குக் கொங்கிரீட் இடும் பணிகளில் அப்பகுதி மக்களும் தங்களது பங்களிப்பினை வழங்கியமை சமூக ஒற்றுமைக்குச் சிறந்த உதாரணமாக அமைந்தது. 


தற்போது இந்த வீதி செப்பனிடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இலகுவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காகத் தங்களது சொந்த நிதியையும் உழைப்பையும் வழங்கிய பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும் அப்பகுதி மக்கள்  தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe