சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினரான கௌரவ றிஸ்விகான் அவர்கள் தனது வட்டாரத்தில் தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக பாடுபட்ட வட்டார பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி அவர்களிடம் வட்டாரத்திற்கான தனது செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் உத்திகள் தொடர்பில் கலந்துரையாடும் ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் எதிர்வரும் 2026-05-12 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் பதினோராவது சபை அமர்விற்கு முன்னதாக தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனாான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் 2026-05-05 அன்று அவரது இல்லத்தில் பிற்பகல் 6 மணியளவில் ஏற்பாடு செய்து அதில் தனது வட்டாரப் பிரச்சினைகள் குறித்து மக்களோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.
மேலும் இந் நிகழ்வில் தான் சார்ந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியினுடைய எதிர்கால அரசியல் வெற்றிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தி உரையாற்றினார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட மக்களில் சிலர் கட்சிப் பணிகள் தொடர்பிலும், கட்சியின் அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் மற்றும் வட்டாரப் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் அவர்களினால் விளக்கமும் அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட மக்கள் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் அவர்களோடு இணைந்து எதிர்கால கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும், றிஸ்விகான் அவர்கள் தனது வட்டாரத்திற்காக தொடர்ந்து செய்யும் அரசியல் பணிக்காக மக்கள் அவரை பாராட்டி வாழ்த்தும், நன்றிகளும் தெரிவித்தனர்.




