சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மே மாதக்கூட்டம் 03.05.2026ம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00மணிக்கு சம்மாந்துறையில் அமைந்துள்ள பிக் செப் ரெஸ்டாரண்டில்- (நெல்லுப்பிடி சந்தி) சங்கத்தினுடைய தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல்.அப்துல் சலீம் தலைமையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
குறித்த இக்கூட்டத்தில் இரண்டு விசேட கௌரவிப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அவை ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று கட்டங்களில் நடத்தப்பட்டது. கூட்ட நிகழ்வுகள் யாவும் சங்கத்தினுடைய செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜே.எம்.நவாஸ் அவர்களின் ஒழுங்கமைத்தலின் கீழ் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் குறிப்பாக முதல் நிகழ்வாக
1. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கின்ற நிகழ்வும்
2. சிரேஷ்டத்துவம் அடைந்த சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கான கெளரவிப்பு நிகழ்வும்
3. மாதாந்தக்கூட்டமும் என்ற அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணியும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினருமான ஏ.எல்.றியாஸ் ஆதம் அவர்களை சங்கத்தின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் நினைவுச்சின்னமும் பொன்னாடையும் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல்.அப்துல் சலீம் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இரண்டாவது நிகழ்வாக தங்களது சட்டத்தொழிலில் சுமார் 10 வருடங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்து சிரேஷ்ட நிலையை அடைந்த மூன்று சட்டத்தரணிகளான ஏ.ஜே.எம்.நவாஸ், யூ.எல்.எம்.சமீம், வி.ரி.ஹசீனா ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணிகளாக சங்கத்தினால் இன்றைய தினம் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் கௌரவப்பதக்கமும் அணிவிக்கப்பட்டது.
குறித்த சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கான கௌரவ நிகழ்வுகள் யாவும் இந்நிகழ்வின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றமை ஒரு விசேட அம்சமாகும்.
அதனை தொடர்ந்து மே மாதத்துக்கான மாதக்கூட்டம் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல்.அப்துல் சலீம் அவர்கள் தலைமையில் பகற்போசனத்துடன் இடம்பெற்றிருந்ததுடன் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக அமைந்திருந்தமை ஒரு விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எல்.அப்துல் சலீம், செயலாளர் ஏ.ஜே.எம்.நவாஸ், பொருளாளர் யூ.எல்.சிபானா உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான முன்னாள் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, சங்கத்தின் தற்போதைய உப தலைவர் ஏ.எம்.நசீல், வை.எம்.அன்வர் சியாத், ஏ.எச்அறூஸ், எம்.எப்.சாமிலா, ஏ.எல்றியாஸ் ஆதம், எம்.எம்.சஹுபீர் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் என ஏராளமான சட்டத்தரணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீடியாப்பிரிவு
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம்








