சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) டாக்டர் M.M.M. சபீர் (Dr. M.M.M. Sabeer) அவர்கள் இன்று (13) உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
டாக்டர் சபீர் அவர்கள் ஏற்கனவே சுமார் 4 வருடங்கள் இப்பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முந்தைய பதவிக்காலத்தில், சிறந்த வழிகாட்டலின் கீழ் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பல தேசிய மட்டத்திலான சிறப்பு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்திருந்தது. அந்த "பொற்கால" சாதனைகளைத் தொடர்ந்து, தற்போது அவர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளமை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வு, டாக்டர் (திருமதி) நிஸ்ரின் ஸியாத் (Dr. Mrs. Nisreen Ziyadh - AMOH) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய வைத்திய அதிகாரி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அலுவலகத்தின் சகல உத்தியோகத்தர்களும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் விசேட விருந்தினராக ஓய்வுபெற்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) CBM. ஹனீபா அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பழைய சாதனைகளைத் தாண்டி, புதிய உத்வேகத்துடன் இப்பிரதேச மக்களின் ஆரோக்கியத்தையும் சுகாதார மேம்பாட்டையும் உறுதிப்படுத்தும் நோக்கில், டாக்டர் சபீர் அவர்களின் தலைமையில் மீண்டும் ஒரு வெற்றிகரமான பயணத்தைத் தொடரத் தயாராக இருப்பதாக அலுவலக உத்தியோகத்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


