Ads Area

சம்மாந்துறை பட்டம் பிட்டி விவசாய அமைப்பின் வட்டை விதானைமார் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் உதுமாலெப்பை JP அவர்களுக்கும் இடையில் சந்திப்பு.

கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான எம். ஐ .எம் மன்சூர் அவர்களுடைய வழிகாட்டுதலில் இடம் பெற்றது.


 சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற  பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் சம்மாந்துறை பட்டம் பிட்டி  விவசாய அமைப்பினுடைய வட்டை விதானைகளுக்கும்,


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை JP அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் சின்ன பள்ளி வட்டார வேட்பாளர் ஏ.எல்.எம் நிப்ராஸ், மத்திய  வட்டார வேட்பாளர் எஸ்.எம் அசாருதீன் சலீம்(அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்  பிரதேச செயலகம் சம்மாந்துறை) 


மற்றும்  பட்டியல் வேட்பாளர் ஆர்.எம் றிபாஸ் (கொள்முதல் உத்தியோகத்தர் பிரதேச செயலகம் சம்மாந்துறை) அவர்களுடைய முயற்சியினால் சம்மாந்துறை பிரதேச செயலாளருடைய அறையினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இச் சந்திப்பில் விவசாயிகள் எதிர்நோக்குகின்ற நெற்களுக்கான உரிய விலை இல்லாத பிரச்சினை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஷ்டஈடு, இந்த போகத்துக்கான  பசளை விநியோகம்  தாமதம், நெற்களை களஞ்சிய படுத்தவதற்கான உரிய களஞ்சிய சாலைகள் இல்லாத மற்றும் விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டதுடன் இது  தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 


விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக  பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாகவும்  இது தொடர்பாக விவசாய அமைச்சர் மற்றும் ஜனாதிபதி அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்  வாக்குறுதி அளித்தார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe