Ads Area

சம்மாந்துறை - கிளிவெட்டி சந்திப் பகுதியில் கோர விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்.

மஜீட். ARM.

 

நேற்று (25) சம்மாந்துறை - கிளிவெட்டி சந்திப் பகுதியில்  இரண்டு கெப் (Cab) ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

​

அதிவேகமாக வந்த இரண்டு வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மல்வத்தை 01 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

​

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக சம்மாந்துறை  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார், விபத்திற்கான மேலதிக காரணங்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe