Ads Area

மேசைப் பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் சாதனை!

 மஜீட். ARM.


இன்று மே 15 திகதி நடைபெற்ற வலய மட்ட மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மிகச்சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, பாடசாலைக்கு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்துள்ளனர்.


​குறிப்பாக, 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் களமிறங்கிய பாடசாலை அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலாம் இடத்தைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது.


 அதேபோல், 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் விளையாடிய மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்குச் சிறப்பினைச் சேர்த்துள்ளனர்.


​இந்த அபார வெற்றிகளின் மூலம், ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டு அணிகளும் மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe