Ads Area

ஜனாதிபதி நிதியத்தின் கல்வி உதவி: சம்மாந்துறையில் முதலாவதாக மடிக்கணினி பெற்ற பல்கலைக்கழக மாணவி!

ஜனாதிபதி செயலகத்தினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

​

இம்முறை இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலமாக கோரப்பட்டிருந்த நிலையில், தகுதியான விண்ணப்பதாரிகள் மிகவும் வெளிப்படையான முறையில் பரிசீலிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

​

அந்த வகையில், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளோக் ஜே. கிழக்கு - 2 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த, களனி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் (Software Engineering) துறையில் கல்வி பயிலும் ஏ.எப்.டி. தூபா என்ற மாணவி, தனது உயர்கல்வித் தேவைக்காக மடிக்கணினி (Laptop) ஒன்றினைப் பெற்றுத் தருமாறு நிகழ்நிலை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.

​

இம்மாணவியின் விண்ணப்பத்தை அடுத்து, சம்மாந்துறை பிரதேச செயலக சமூக சேவை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட  கள விஜய அறிக்கையின் (Field Visit Report) பிரகாரம், மாணவியின் கல்வித் தேவை மற்றும் தகைமை உறுதிப்படுத்தப்பட்டு இந்த உதவி அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

​

இதனடிப்படையில், அவருக்கான புதிய மடிக்கணினியினை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி நிதிய செயலகத்தில் வைத்து அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.

​

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் கல்வி உதவித் திட்டத்தினூடாக மாணவர் ஒருவருக்கு மடிக்கணினி ஒன்று கிடைத்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe