Ads Area

கிழக்கிழங்கையின் முதலாவது மொழியியல் கலாநிதியாக பட்டம் பெற்றார் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். றிஸ்வான்!

✍️ கியாஸ் ஏ புஹாரி.


இரத்தினபுரி - இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவராக பணிபுரியும் எம்.எஸ்.எம். றிஸ்வான் அவர்கள் தொழில் முறை எழுத்தில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பவர்களின் இலக்கண பிழைகளை குறைத்தல் - (உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களிடையே பகுப்பாய்வு மூலம் ஒரு ஒப்பீட்டு ஆய்வு) என்ற தலைப்பில் தனது கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை இலங்கை கழனிப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து, இன்று (2026.06.08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெ பெற்ற இலங்கை கழனி பல்கலைக்கழகத்தின் 158வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் தனது கலாநிதி பட்டத்தை பெற்றார்.


மொழியியல் கலாநிதி றிஸ்வான் அவர்கள் தனது முதலாவது இளங்கலைப் பட்டத்தை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தை பிரதான படமாகக் கொண்டு கற்றுக் கொண்டார்.


தனது பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் என்ற விசேட கற்கை நெறியை இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டமை ஒரு சிறப்பம்சமாகும்.


சம்மாந்துறை வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட Contract Basis ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2004 ஆண்டு ஜனவரியிலிருந்து தனது ஆங்கில கற்பித்தல் பணியை ஆரம்பித்தார். 


அவ்வாறு தொடரும் சந்தர்ப்பத்தில் 2008ம் ஆண்டு ஆங்கில ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை நடைபெற்றுது. முழு இலங்கை ரீதியாக நடைபெற்ற அந்த ஆங்கில ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் அதில் எம்.எஸ்.எம். றிஸ்வான் அவர்கள் செய்யப்படுகிறார். 


அதன் பின்னர் 2019 இலிருந்து சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஆங்கிலப் பாடத்துக்குரிய வளவாளராக நியமனம் பெற்று சம்மாந்துறை வலயத்தில் தனது ஆங்கில கற்பித்தலையும்; அதனோடு இணைந்த கல்விச் சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தார். 


கல்வி வலயத்தின் வளவாளராக இருந்த குறுகிய காலப் பகுதியிலேயே 2019 செப்டெம்பர் மாதமளவில் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரியில் வளவாளராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து இன்றுவரை தனது ஆங்கில கற்பித்தல் நடவடிக்கைகளில் வளவாளராக ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்.


ஆங்கில வளவாளர் றிஸ்வான் அவர்களை 'பிரிட்டீஸ் கொலிஜ் றிஸ்வான் சேர்’’ - என்றால்தான் பலருக்கம் தெரியும். அழகான தொனியில் ஆங்கிலக் கல்வியை கற்பிக்க கூடியவர். ஆரம்ப காலத்திலேயே தனது பிரத்தியோக வகுப்புக்களில் Presentation ஊடாக Monitor இல் குழு குழுவாக மாணவர்களுக்கு பிரத்தியே ஆங்கில கல்வியை கற்றுக் கொடுத்தவர்.


இவ்வாறு ஆங்கிலத்துறை சார்ந்த கல்வி நடவடிக்கையிலேயே தொடராக இலட்சியத்துடன் பயணித்த இவர் ஆசிரியர் துறையோடு மட்டும் நின்று விடாமல் ஆங்கிலக் கல்வி விரிவுரையாளராக உயர்வு பெற்று இரத்தினபுரி - இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவராக பணிபுரியும் அதே வேளை இன்றைய தினம் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் கலாநிதி பட்டத்தை பெற்றார்.


சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி எம்.எஸ்.எம். றிஸ்வான் அவர்கள் மர்ஹூம் மீரா சாஹிப் - மர்ஹூமா ஆசியா உம்மா ஆகியோரின் இளைய புதல்வாரன இவர் இன்று பெற்றுள்ள கலாநிதி பட்டமானது கிழக்கிழங்கையின் முதலாவது மொழியியல் கலாநிதி பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Dr MSM Rizwan PhD (Kelaniya), MPhil (Kelaniya), MA (Kelaniya), PGDE-TESL (Colombo), BA (SEUSL), CTrIP in Higher Education (EUSL)  அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe