Ads Area

மஜீட்புர சுகாதார நிலையத்திற்கு நீர்தாங்கி மற்றும் குழாய் தொகுதி பொருத்தி கையளிப்பு: கிராம மக்கள் நன்றி.

சம்மாந்துறை அன்சார்.


சம்மாந்துறை மஜீட்புர கிராமத்தில் உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்தும் சுகாதார நிலையத்திற்கான நீர் தாங்கி மற்றும் நீர் குழாய் பொருத்தும் திட்டம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இத்திட்டமானது மஜீட்புர பிரஜாசக்தி தவிசாளர் AB. இர்சாத் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க, நெதர்லாந்து சர்வதேச மனிதாபிமான அமைப்பின் (Netherlands International Humanitarian Organization) நிதி நன்கொடையில், "அல்-கித்மத்துல் உம்மா பவுண்டேஷன்" (Al-khidmathul ummah foundation) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப் பயனுள்ள திட்டத்தை வழங்கிய சர்வதேச அமைப்புக்கும், அதனை நேர்த்தியாக நடைமுறைப்படுத்திய பவுண்டேஷனின் பணிப்பாளர் G.M. பஹிஹ் அவர்களுக்கும் மஜீட்புர கிராம மக்கள் சார்பாக முதற்கண் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இத்தகைய பயனுள்ள பல அபிவிருத்தி திட்டங்களை சம்மாந்துறை மண்ணுக்கு கொண்டு வந்து, பிரதேசத்தின் பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உதவி பொறியியலாளரும், சம்மாந்துறை தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பாளருமான M. இம்தியாஸ் மர்சூக் ஆவார். சம்மாந்துறை பிரதேசத்தின் நீர்தேவைகளை இனங்கண்டு இத்திட்டங்களை முன்னெடுத்து வரும் அவரது அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு கிராம மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றனர்.


சம்மாந்துறை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் சகல அபிவிருத்தி திட்டங்களிலும் மஜீட்புர கிராம மக்களும் பயனாளிகளாக உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, இந்த திட்டத்திலும் கிராமத்தை இணைத்து செயல்படுத்திய சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் YBM. நவாஸ் அவர்களுக்கும் கிராம மக்கள் இத்தருணத்தில் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.



இப் புதிய நீர்தாங்கி தொகுதியை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று இந்நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட சுகாதார வைத்திய அதிகாரி (MOH) Dr. Mrs. நிஸ்ரின் ஜியாத் (Dr Mrs Nisreen Ziyadh) அவர்களுக்கு மக்கள் நன்றி கூறினர். மேலும், இந்நிகழ்வை சிறப்பித்த பிரஜா சக்தி தவிசாளர்களான A.M. ஹினாயத்துல்லாஹ், A.M. முசாபிர், கல்விமான் M.M. தௌபீக் ஆசிரியர், பள்ளிவாசல் மௌலவிமார்கள் மற்றும் இதில் பயனாளிகளாக கலந்துகொண்ட கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மஜீட்புர கிராம மக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் சமர்ப்பிக்கப்பட்டன.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe