Ads Area

மஜீத்புர பிரஜாசக்தி தவிசாளர் ஏ.பி. இர்சாத் மற்றும் இம்டாட் விளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில் சிரமதானம்!

சம்மாந்துறை அன்சார்.


மஜீத்புர பிரஜாசக்தி தவிசாளர் AB. இர்சாத் மற்றும் இம்டாட் ஸ்போர்ட்ஸ் கழக உறுப்பினர்கள் இணைந்து, தேசிய மக்கள் சக்தியின் மல்வத்தை வட்டார பிரதேச சபை உறுப்பினர் தனுஜன் அவர்களிடம் அண்மையில் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.


குறித்த பாடசாலை மைதானத்தில் உள்ள மரத்தின் வேர்கள் காரணமாக, அங்கு விளையாடும் மாணவர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் நீண்டநாட்களாக பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த வேர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, பிரதேச சபை உறுப்பினர் தனுஜன் உடனடியாக சாதகமான பதிலளித்துள்ளார்.



விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, மைதானத்தில் அசோகரியத்தை ஏற்படுத்திய மரத்தின் வேர்களை அகற்றுவதற்காகத் தேவையான இயந்திரத்தை அவர் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அத்தோடு, அதற்கான முழுமையான நிதி உதவியையும் வழங்கி இப்பணிகளை விரைவுபடுத்தியுள்ளார்.


பிரதேச சபை உறுப்பினரின் இந்தத் துரித செயலுக்காக, பாடசாலை மாணவர்கள், மஜீத்புர பொதுமக்கள் மற்றும் இம்டாட் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.



இதேவேளை, பாடசாலை மைதானத்தை முழுமையாகச் செப்பனிட்டு, அதனை மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றுவதற்குரிய பணிகளில் பாடசாலையின் அதிபர் YBM. இஸ்மாயில் அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்.


மைதானப் புனரமைப்புப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்குத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் அதிபர் அவர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் தமது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe