மஜீட்புர அன்சார்.
அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, சம்மாந்துறை மஜிட்புர மண்ணைச் சேர்ந்த மாணவி முகம்மது பசில் இல்ஹாமா நிதா 9A சித்திகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இம்மாணவியின் இப்பெருமைமிகு சாதனையை பாராட்டும் வகையில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வொன்று நேற்று நடைபெற்றது.
முன்னாள் அதிபர் திரு. முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்விமான்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். மஜீட்புர மண்ணிற்குப் பெருமை சேர்த்த மாணவியைக் கௌரவிக்கும் முகமாக, அவர்கள் இன்று நேரடியாக மாணவியின் இல்லத்திற்குச் சென்றிருந்தனர்.
"சம்மாந்துறை, மஜிட்புர மண்ணில் இருந்து இத்தகையதொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி, ஒட்டுமொத்த பிரதேசத்திற்கும் இப்பெண் பிள்ளை பெருமை சேர்த்துள்ளார்."
இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, மாணவி முகம்மது பசில் இல்ஹாமா நிதாவின் அர்ப்பணிப்பான படிப்பும், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோரின் தியாகமும் பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. தொடர்ந்து அதிதிகள் முன்னிலையில் மாணவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் 'Education Forum' அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவியின் எதிர்காலக் கல்விப் பயணத்திற்குத் தங்களது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.





.jpg)
