மஜீட். ARM.
நடைபெற்று முடிந்த சம்மாந்துறை வலய மட்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில், மல்வத்தை விபுலானந்தா பாடசாலை மாணவர்கள் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டித் தொடரில், இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஏ. ததிஸ்கா கலந்து கொண்ட மூன்று விளையாட்டுகளிலும் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இவர் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பின்வரும் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்று, வலய மட்ட சாம்பியன் பட்டத்தைச் சூடியுள்ளார்:
🔸குண்டு எறிதல் (Shot put) – முதலாம் இடம்
🔸வட்டு எறிதல் (Discus throw) – முதலாம் இடம்
🔸ஈட்டி எறிதல் (Javelin throw) – முதலாம் இடம்
மாணவர்களின் இந்த அபார வெற்றிக்கும், பாடசாலையின் சாதனைக்கும் பின்னணியில் இருந்து அர்ப்பணிப்புடன் வழிநடத்திய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாடசாலை அதிபர் R. ரத்னகுமார் உடற்கல்விப் பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்களான Z. றியாஸ் Y. சஞ்சீவன் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் UM. ரிஸ்கான் ஆகியோரது முறையான வழிகாட்டல்களுக்கே இப் பாராட்டுக்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அத்தோடு, இச்சாதனைப் பயணத்திற்கு உறுதுணையாக நின்ற ஏனைய அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும், சாதனை படைத்த மாணவிகளுக்கும் பாடசாலை நிர்வாகத்தினர் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

