பாறுக் ஷிஹான்.
டிக்டொக் செயலி ஊடாக கடமையிலுள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமில்லாமல் வாகனமோட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், அவற்றைச் செலுத்தியவர்களும் சட்டநடவடிக்கைக்குட்படுத்தப்பட்டனர்.
இது தவிர, டிக்டொக் செயலியூடாக கடமையிலுள்ள போக்குவரத்துப்பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்டவர்கள் அடையாளங்காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.
குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப்பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

