Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு: அரச சேவைகள் பற்றிய விழிப்புணர்வை வலுப்படுத்த புதிய முயற்சி!

மனித மேம்பாட்டிற்கான பங்கேற்பு வழிகளை ஊக்குவித்தல் (3P4D) எனும் சிறுமானிய திட்டத்தின் கீழ், சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு (Sammanthurai Community Based Organisations Consortium – Sri Lanka) நிறுவனத்தினால் பிரஜைகள் சாசனம் (Citizen Charter) தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி (Television) ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இத் தொலைக்காட்சி வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (06) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களிடம் தொலைக்காட்சி உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜெமில், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. அகமட் சபீர் மற்றும் சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கு அரச சேவைகள் தொடர்பான தகவல்களைத் திறம்படவும், எளிதாகவும் கொண்டு சேர்க்கும் இம்முயற்சிகளுக்குப் பங்களிப்பு வழங்கிய சம்மாந்துறை சமூக மட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு, பொதுவான தளத்திற்கான தேடல் (Search for Common Ground) மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகிய அமைப்புகளுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe