சம்மாந்துறை அன்சார்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையில் டெங்கு நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தெருமுனைப் பிரச்சார பயான் நிகழ்வொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் (10-07-2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 5:00 மணிக்கு சம்மாந்துறை அம்பாறை வீதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இச்சிறப்பு விழிப்புணர்வு உரையை SLTJ அமைப்பின் ஆற்றல்மிகு பேச்சாளர் சகோதரர் ஹரீஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், டெங்கு நோய் பரவக்கூடிய வழிகள், வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் இந்நோயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மிகத் தெளிவாக விளக்கமளித்தார்.
இப்பயண வழியே சென்ற பெருமளவிலான சகோதர, சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் ஆவலோடு நின்று இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செவிமடுத்து, பயன் பெற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ், சமூக நலனை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



