Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய நிருவாக உத்தியோகத்தராக சதுன் பிரதீப் மதுரங்க நியமனம்!

 அம்பாரை, உகன பிரதேசத்தைச் சேர்ந்த சதுன் பிரதீப் மதுரங்க, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய நிருவாக உத்தியோகத்தராக (Administrative Officer) உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.


முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்ற நிலையிலேயே, அவர் இந்த புதிய நியமனத்தைப் பெற்றுள்ளார். இதனடிப்படையில், அண்மையில்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தனது வருகையை அறிக்கையிட்ட அவர், பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடம் புதிய சேவை நிலையத்திற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


நிர்வாக மேம்பாடு: நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அதே தினத்தில், சதுன் பிரதீப் மதுரங்க சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


வைத்தியசாலையின் நிருவாகச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் சீராகவும் முன்னெடுக்கும் நோக்குடன் இப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள புதிய நிருவாக உத்தியோகத்தர் சதுன் பிரதீப் மதுரங்கவுக்கு, சுகாதாரத் துறைசார்ந்த பல்வேறு அதிகாரிகளும், ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe