Ads Area

சம்மாந்துறை சுவானியார் பாலத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் உள்ளுராட்சி அமைப்புக்களில் உள்ள கிராமிய பாலங்களை மேம்படுத்தும் திட்டத்தினூடாக சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட சுவானியார் பாலத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க பிரதம  அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.


இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சாகர ஜயதிலக, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.எம்.எம்.அப்னான், ஐ.எம்.ஹாதிக், வை.வீ.எம்.நபாஸ், எம்.ஆர்.ஆஷிக் அஹம்மட், எஸ்.எல்.எம்.பஹ்மி, ஏ.சி.எம்.நயீம், பிரஜா சக்தி உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe