Ads Area

சம்மாந்துறை ஹனா மகளிர் சங்கத்தின் மாதாந்த ஒன்று கூடல்: புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கல்!

சம்மாந்துறை அன்சார்.


சம்மாந்துறை உடங்கா - 02 பகுதியில் இயங்கி வரும் 'ஹனா மகளிர் சங்கத்தின்' மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (21) சங்கத்தின் தலைவி ஏ. முஸத்திகா அவர்களின் இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் கலந்துகொண்டார். இதன்போது, சங்கத்தில் புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை அவர் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.


தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான், ஹனா மகளிர் சங்கத்தின் சமூக நலச் செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசியதுடன், சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி சார்பாகவும், தனது தனிப்பட்ட ரீதியிலும் முழுமையாகச் செய்து தருவதாக உறுதியளித்தார்.


சம்மாந்துறை வீரமுனை வட்டாரப் பிரதேசத்தில் இயங்கி வரும் ஹனா மகளிர் அமைப்பானது, நீண்டகாலமாக அப்பகுதிப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் பல்வேறு நலன்புரிச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe