Ads Area

சம்மாந்துறையைச் சேர்ந்த U.L. அப்துல் பாசித் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் தமிழ் / ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நியமனம்!

சம்மாந்துறையைச் சேர்ந்த U.L. அப்துல் பாசித் அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் அதிகாரப்பூர்வமாக சத்தியப்பிரமாண தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக (Sworn Translator) நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்களுக்கானத் தகுதிப் பரீட்சையில் தோற்றி இவர் திறமையாகச் சித்தியடைந்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து, 2026 ஜூலை 20 ஆம் திகதி கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் கௌரவ பதில் நீதிபதி அவர்கள் முன்னிலையில் U.L. அப்துல் பாசித் தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதுடன், உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்த உயர் நியமனத்தின் ஊடாக, நீதிமன்றங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அதிகாரப்பூர்வ நிறுவனங்களுக்கான தமிழ் - ஆங்கில இருமொழி மொழிபெயர்ப்புச் சேவைகளைச் சட்டப்பூர்வமாக வழங்கும் அதிகாரத்தை அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe