Ads Area

வரலாற்றுச் சாதனை படைத்தது சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம்: தேசிய மட்ட மேசைப்பந்தாட்டப் போட்டிக்குத் தகுதி!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டியில், சம்மாந்துறை கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.


கடந்த ஜூலை 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு அரங்கில் (Weber Indoor Stadium) இப்போட்டிகள் நடைபெற்றன.


இப்போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் 20 வயதுக்குட்பட்ட மகளிர் அணி மிகச் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்தி, மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை (1st Runner-up) தட்டிச் சென்றது. இதன் மூலம் தேசிய மட்டப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியையும் இவ்வணி பெற்றுள்ளது.


கிழக்கு மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு மாணவிகள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். மாகாண மட்டப் பெருவிளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்று, தேசிய மட்டத்திற்கு இப்பாடசாலை தகுதி பெற்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று மைல்கல் சாதனை சம்மாந்துறை மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe