Ads Area

சாய்ந்தமருது பிரதேசத்தில் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது : பொலிஸார் தீவிர விசாரணை.

பாறுக் ஷிஹான்.


சாய்ந்தமருது பிரதேசத்தில் சுமார் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பிரகலாதன் தலைமையில் அமைக்கப்பட்ட மூவரடங்கிய பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர்.


இதன் போதே, விற்பனைக்காகவும் பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரான இளைஞரும் கைது செய்யப்பட்டார்.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe