AG. Mufees
2026ஆம் ஆண்டுக்கான சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா (Sir) அவர்களின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி கே. சமீர் அவர்களின் ஒருங்கிணைப்பில் 2026.08.02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழகங்களுக்கான இளைஞர் அமைப்பாளரும் பொறியியளாளருமான இம்தியாஸ் மர்சூக் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர் முஹம்மது முபீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
பிரதேச மட்ட இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

