கிளீன் சிறிலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்ட "அத்தம" தேசிய தூய்மைத் தினம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பல கிராம சேவகர் பிரிவுகளிலும் அத்தம துாய்மை தின நிகழ்வுகள் இடம் பெற்றுவருகின்றது. இதனடிப்படையில் நேற்று (08) உடங்கா - 01 மற்றும் உடங்கா 02 கிராம சேவகரி பிரிவுகளில் உள்ள S24 கால்வாயினை சிரமதானம் செய்யும் நிகழ்வு இடம் பெற்றது.
‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ என்பது அரசங்கத்தின் கொள்கைத் திட்டம் என்றால், ‘அத்தம’ என்பது அத்திட்டத்தை மக்களின் இதயங்களுக்குக் கொண்டு சேர்த்து வெற்றியாக்குவதற்கான சமூகத் தத்துவமாகும்.
இலங்கையின் பாரம்பரிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் "அத்தம" என்பது இலாப நோக்கற்ற, கூட்டு உழைப்புப் பரிமாற்ற முறையைக் குறிக்கிறது. கிராமப்புறங்களில், குறிப்பாக விவசாய சமூகங்களிடையே நிலவும் இந்உன்னத வழக்கத்தின்படி, பணப் பரிமாற்றம் இல்லாமல் ஒருவருக்கொருவர் உடல் உழைப்பைத் தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்துகொள்வது இதன் சிறப்பம்சமாகும்.
இனடிப்படையில் உடங்கா - 01 மற்றும் உடங்கா 02 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள S24 கால்வாயினை துாய்மையாக்கும் அத்தம வேலைத்திட்டமானது நேற்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் உடங்கா - 01 மற்றும் உடங்கா - 02 பிரிவுகளின் கிராம சேவகர்கள், பொதுமக்கள், சமூக சேவை அமைப்புக்கள், வீரமுனை வட்டார சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ எம். ஐ.எம். றிஸ்விகான், ஏ.எச்.எம். காலித், ஆசிக் ஆகியோரும் இணைந்து கொண்டனர். அதனோடு உடங்கா - 01ன் பிரஜா சக்தி தவிசாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உடங்கா - 01 மற்றும் உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவுகளில் இயங்கி வரும் ஹனா மகளிர் சங்கத்தினர் மற்றும் பிரஜா சக்தி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த இந் நிகழ்வினை பார்வையிட சம்மாந்துறைப் பிரதேச செயலக செயலாளர் திரு. ஹனீபா அவர்களும் வருகை தந்திருந்தனர்.
மேலும் இந் நிகழ்வு திறண்பட செயற்பட சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றும் வாகனங்கள் போன்றவற்றினை தந்துதவி சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் அவர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.












