சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை அரபா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு. மஜீட் இஸ்மாயில் அவர்கள் நியமனம் பெற்று, பாடசாலையின் முன்னைய அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் முன்னிலையில் பாடசாலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அதிபர் அவர்களை அன்புடன் வரவேற்றனர்.
பாடசாலையின் கல்வி முன்னேற்றம், மாணவர்களின் ஆளுமை விருத்தி, இணைப்பாடவிதான மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அர்ப்பணிப்புடனும் திறம்படவும் வழிநடத்தக்கூடிய புதிய அதிபர் ஒருவரை எமது பாடசாலை பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் உணர்வதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.




