Ads Area

சம்மாந்துறை மல்வத்தைப் பகுதியில் 6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பாரம்பரிய உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்.

அரசாங்கத்தின் 'பிரஜா சக்தி' செயற்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பிரதேசத்தில் 6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பாரம்பரிய உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்திற்கான இடத் தெரிவில் ஏற்பட்ட சில சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாவட்ட செயலாளர் அனுபமா மங்கள விக்கிரமாராச்சி  அவர்கள்  (17) நேரில் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 


சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனீபா அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது, குறித்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் அங்கு நிலவும் பிரச்சினைகள் என்பவற்றை மாவட்டச் செயலாளர் நேரில் பார்வையிட்டு அவதானித்ததுடன், அவற்றுக்கான உரிய ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்தார். 


இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், பிரதேச சபை உதவித் தவிசாளர், வீ.வினோக்காந்த்,கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,பிரதேச சபை உறுப்பினர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரஜா சக்தி தவிசாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe