கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த நான்கு மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் காலை ஆராதனை நிகழ்வுடன் இணைந்து, கடந்த 2026.09.07 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வு பாடசாலை அதிபர் A. முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்த நான்கு மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் M.H. ஜெசீலா, ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வு, பாடசாலை சமூகத்தினரிடையே பாராட்டையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.





