சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் பிரிவில் உள்ள நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் அம்பாரை மாவட்ட மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் DMSB . திஸ்ஸநாயக்க அவர்களின் வழிகாட்டலிலும் Soil & Leaf Care Partner நிறுவனமான BIOGENiIC soil sense மும் இணைந்து சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் மு.ஹ.முர்ஷிதா ஷிரீன் தலைமையில் விவசாய தொழில்நுட்ப உதவியாளர் R.ரஜிரேகா அவர்களின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட விவசாயயிகளின் களங்களில் மண் மாதிரியினை சேகரித்து மண் பரிசோதனை செய்து உடனுக்குடன் முடிவுகளையும் வழங்கும் செயல் திட்டம் கடந்த மாதம் 18 ம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சம்மாந்துறை விவசாய விரிவாக்க நிலையத்திலும் 18.08.2026 ம் திகதி இடம்பெறற்து.
இந்நிகழ்வில் விவசாய உதவி பணிப்பாளர் S.பரமேஸ்வரன், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் YB நவாஸ், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுல்தான் சரீபா,சம்மாந்துறை மேற்கு விவசாய போதனாசிரியர் MH.முர்ஷிதா ஷிரீன், சம்மாந்துறை கிழக்கு விவசாய போதனாசிரியர் P. ராஜகருணா, BIOGENIC soil sense உத்தியோகத்தர்கள்,விவசாய தொழில்நுட்ப உதவியாளர்களான R.ரஜிரேகா,SM.பாத்திமா சில்மியா U.கஜானந் உட்பட சம்மாந்துறை விவசாயிகளும் கலர்ந்து கொண்டனர்.இதன் போது விவசாயிகள் தங்களது நெல் வயல் நிலங்களில் உள்ள மண் மாதிரியினை எடுத்துவந்து தங்களது வயல் நிலத்தில் காணப்படும் தாவர போசணைகளையும் அதன் அளவினையும் உடனடியாக அறிந்து கொண்டனர்.
இவ்வாறு மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் அவர்களது வயலுக்கு தேவையான பசளை அளவினை திட்டமிட்டு அதனை இடுவதன் மூலம் தேவையற்ற செலவீனத்தை குறைத்து அதிக விளைச்சலை பெறுவதனூடாக நிகர இலாபத்தினையும் அதிகரிக்கலாம். இந்நிகழ்வில் விவசாயிகள் மண் மாதிரி சேகரித்தல் மற்றும் பரிசோதித்தல் தொடர்பான பூரண விழிப்புணர்வினை பெற்றுக் கொண்டதுடன் இவ்வாறு மண் பரிசோதனை செய்வதன் நோக்கம்,அதன் அனுகூலம் மற்றும் தேவையற்ற செலவீனங்களை குறைக்க குறைக்கலாம்.






