Ads Area

சவுதி அரேபியாவிற்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தற்காலிகமாக ரத்து!

சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு நிகழ்வைத் தொடர்ந்து, ரியாத்திற்கான அனைத்து விமான சேவைகளையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 18 வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.


பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மதிப்பீடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.


"எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்" என்று குறிப்பிட்ட விமான நிறுவனம், வணிக ரீதியான விமான சேவைகளைத் தொடங்குவதற்கான உகந்த சூழல் நிலவுவது உறுதிசெய்யப்பட்டவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிந்துள்ளது.


இந்த விமான சேவை ரத்து செயலால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், மேலதிக தகவல்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தையோ அல்லது தங்களின் சுற்றுலா முகவர்களையோ (Travel agents) தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை24




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe