சம்மாந்துறை முகைதீன் மாவத்தைப் பகுதியில் மாட்டுக் கழிவுக் குப்பைகளை சிலர் கொண்டி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் நாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் பல தொற்று நோய்களுக்கும் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இச் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் இருக்கும் அதேவேளை சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக கவனிப்பாறற்றும் இருந்து வருவது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய அசுத்தமான சூழ்நிலை காரணமாக பிரதேசத்தில் டெங்கு நோய்த் தாக்கமும் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றர்.