சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்கிறார்கள்.
இடப்பெயர் வரலாறு
சம்மாந்துறையின் இன்றைய நிருவாகப்பரப்பு உள்ளிட்ட பிரதேசம் பல பெயர்களால் (மட்டக்களப்பு, மட்டக்களப்பு தரவையூர், மக்னஸ் லித்தஸ், சம்மாந்துறைப்பற்று, சம்மாந்துறை) காலத்துக்கு காலம் அழைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை என்ற இவ்விடப்பெயர் சம்மான், துறை என்ற இரு பதங்களின் சேர்க்கையால் உருவானது. இங்குள்ள துறை என்பது சம்மாந்துறையில் காணப்பட்ட பழைய துறைமுகத்தைக் குறிக்கின்றது. சம்பான் எனப்படுவது ஒரு நீர்ப்போக்குவரத்து சாதனமாகும். இது சிறிய கப்பல் போன்றது. இதனை செலுத்துவோர் சம்பானோட்டிகள் அல்லது சம்பான் காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் 'சம்மான்காரர்' என அழைக்கப்பட்டனர். கொழும்பு 'சம்மான் கோட்டுப் பள்ளி' இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் நிலவுகைக்கான ஒரு சான்றாகும். அத்துடன் மேலும் சில யூகங்களும் சம்மாந்துறையின் பெர்பற்றி தெரிவிக்கப்படுகின்றன அதாவது, சாமான்கள் வந்திறங்கி ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகமாக இருந்தபடியாலும் சாமான்துறை, சம்மாந்துறையாக பெயர் பெற்றிருக்கலாம் என்றும். இந்திய முஸ்லிம் வியாபாரிகளும், மலாயர்களும் வர்த்தக நோக்கில் வங்காள விரிகுடாவிலிருந்து மட்டக்களப்பு வாவியூடாக, அதன் தென்பகுதித் துறையில் (மட்டக்களப்பு தரவை) வந்திறங்கியபடியால் சம்பன்காரர் துறை சம்மாந்துறையாகியது எனவும். மற்றும் மிகப் பழைய காலந்தொட்டு சம்மாந்துறை நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கியமைக்கான ஆதாரங்கள் அனேகமுள்ளன. இலங்கையைத் தரிசித்த நாடுகாண்பயணி சிந்துபாத்தின் கூற்றில் வயலுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்ததாகவும், அவர் அரபியில் தன்னுடன் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். இங்கு சம்பா நெல் அதிகளவு விளைவிக்கப்படவதாகவும் உள்ளது எனவே 'சம்பா' என்ற அரிசியை ஏற்றுமதி செய்த துறையாகவும் விளங்கியதால் சம்மாந்துறையாகவும் பெயர்பெற்றிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இங்குள்ள பழைய உறுதி ஆவணங்களில் 'சம்பாந்துறை' எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பெரும்பாலானோர் சம்பாகன் படகுகளின் வருகையையே காரணியாக கொள்கின்றனர்
துறைமுக வரலாறு
சம்மாந்துறையின் அமையப்பெற்றிருந்த பாரிய பண்டமாற்று வர்த்தக சந்தை (ஆலையடி என்றழைக்கப்பட்ட பழைய மார்க்கட்) யின் நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு வர்த்தகர்கள், இறைநல்லடியார்கள் வந்துகொண்டிருந்ததினர் அராபிய முஸ்லிம்களின் வருகையும் தவிர்க்க முடியவில்லை. அதனடிப்படையில் சிறுசிறு அளவில் முஸ்லிம்களின் குடியிருப்புக்களும் இங்கு அமையப்பெறலாயின. துறைமுகமும், சந்தை வசதிகளும் அமையப்பெற்றிருந்த வகையால், உள்ளுர் வாசிகளின் உதவிகளோடு 'தாவளம்' என்றழைக்கப்படும் மாடுகளின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்காக சம்மாந்துறையில் தாமதித்துச் செல்லவேண்டியிருந்ததால், வணக்கஸ்தலத்தின் அவசியம் உணரப்பட்டதால் முதன்முதலாக 12 ம் நூற்றாண்டளவில் 'முகையதீன் பள்ளி' என்ற முதல் பள்ளிவாசல் சம்மாந்துறையில் அமையப்பெறலாயிற்று. முகையதீன் அப்துல் காதிர் அல்-ஜிலானி என்ற மார்க்கப் பெரியார் அக்காலத்தில் பிரபல்யமான மார்க்க அறிஞராக விளங்கியமையால், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 'முகையதீன்' என்ற பெயரை இப்பள்ளிக்கு வைத்திருக்கின்றனர் என அறிய முடிகின்றது.
இதைத் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டளவில் சம்மாந்துறை துறைமுகத்தில் வந்திறங்கிய சரக்குக் கப்பலில் இருந்து இரண்டு இறைநல்லடியார்களும், அவர்களுடன் ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றும் இன்றைய பெரியபள்ளியடியில் இருந்த மரத்தடியில் இளைப்பாறினர். இதன் அண்மையிலிருந்த சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் இவ்நல்லடியார்களின் வருகையைக் கேள்விப்பட்டு அவர்களைத் தரிசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக ஒன்று கூடினர். அவர்களில் ஒருவர் மத்திய கிழக்கைச் சேர்ந்த சாயலையுடையவராகவும், மற்றவர் தென்னிந்திய சாயலையுடையவராகவும் காணப்பட்டனர். இவ்விருவரையும் அக்குழந்தையையும் அப்போதைய சின்னப்பள்ளியில் தங்குமாறு மக்கள் வேண்டியும் மறுத்த படியால், பெரிய பள்ளி வளவிலேயே அவர்களுக்கான இருப்பிடம் அமைத்துக் கொடுத்தனர். அன்றைய சம்மாந்துறை முஸ்லிம்கள் கோசப்பா, கோஸ்முகையதீன் அப்பா, உம்முகுல்தூம் என இவர்களை அழைத்தனர்.
குடி வரலாறு.
சம்மாந்துறையில் 33 க்கு மேற்பட்ட குடிகள் காணப்பட்டிருந்தாலும் தற்போது 31 குடிகளே வழக்கில் உள்ளன.
பள்ளிவாசல்களின் வரலாறு.
சம்மாந்துறையில் 40 ற்கும்மேற்பட்ட பள்ளிவாயில் இருக்கின்றன.
முகையதீன் பள்ளி (12 ம் நூற்றாண்டுக்கு முந்தையது) (சின்னப்பள்ளி)
பெரிய பள்ளி (15 ம் நூற்றாண்டு) கோஸப்பா பள்ளி)
கலந்தரப்பா பள்ளி (8 ம் நூற்றாண்டுக்கு முந்தையது)
குருந்தையடியப்பா பள்ளி
காட்டவுலியா பள்ளி
வீரையடியப்பா பள்ளி
மஸ்ஜிதுல் தைக்கிய்யா
மஸ்ஜதுல் உம்மா (புதுப்பள்ளி, மதரஜா பள்ளி)
மஸ்ஜிதுல் ஸலாம்
மஸ்ஜிதுல் அழ்பர்
மஸ்ஜிதுல் ஜாரியா
மஸ்ஜிதுல் ஜலாலியா
மஸ்ஜிதுல் கைர்
2 மஸ்ஜிதுல் நகர்
பெரிய பள்ளி (15 ம் நூற்றாண்டு) கோஸப்பா பள்ளி)
கலந்தரப்பா பள்ளி (8 ம் நூற்றாண்டுக்கு முந்தையது)
குருந்தையடியப்பா பள்ளி
காட்டவுலியா பள்ளி
வீரையடியப்பா பள்ளி
மஸ்ஜிதுல் தைக்கிய்யா
மஸ்ஜதுல் உம்மா (புதுப்பள்ளி, மதரஜா பள்ளி)
மஸ்ஜிதுல் ஸலாம்
மஸ்ஜிதுல் அழ்பர்
மஸ்ஜிதுல் ஜாரியா
மஸ்ஜிதுல் ஜலாலியா
மஸ்ஜிதுல் கைர்
2 மஸ்ஜிதுல் நகர்
இவர்களது மார்க்கப்பிரசங்கம், பேணுதலான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அப்பிரதேசத்தில் இஸ்லாத்தின் இருப்பும், வளர்ச்சியும் அதிகரிக்கலாயின. முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களும் இந்நல்லடியார்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கி வரலாயினர். இவ்விறை நல்லடியார்களின் மறைவின் பின்னர் மக்கள் இவர்களை அவுலியாக்கள் என மதிப்பும் மரியாதையும் வழங்கி வந்ததுடன் அவ்விடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர். இதனால் முதலாவது பள்ளிவாசல் "முகையதீன் (சின்னப்பள்ளி) பள்ளிவாசலுடன் இரண்டாவது பள்ளியாக அவுலியாவின் பெயரில்" கோசப்பா பள்ளி "யும் உதயமாயிற்று.
1800 ஆம் ஆண்டளவில் கோசப்பா பள்ளி என்ற சிறு குடிசை ஓரளவுக்கு கல்லாலும், சிப்பி ஓட்டினாலும் விஸ்தரிக்கப்படுகின்றது. இதன் பிற்பாடு ஜும்ஆத் தினங்கள் முகையதீன் பள்ளியிலும், கோசப்பா பள்ளியிலுமாக மாறி மாறி நடைபெற்று வரலாயிற்று. இவ்விரு பள்ளிகள் தவிர சம்மாந்துறையின் சுற்றாடலில் இறை நல்லடியார்களின் தங்குமிடங்களாக இருந்த இடங்களும் பள்ளிகளாக உருப்பெற்றென. கலந்தரப்பா பள்ளி மல்கம்பிட்டியிலும், குருந்தையடியப்பா குடாவட்டையிலும், காட்டவுலியா சேனைவட்டையிலும், வீரயடியப்பா கொண்டவட்டுவானிலும் கண்கத்தியப்பா சின்னப்பள்ளி ஒழுங்கையிலும் அமையப்பெறலாயின.
சம்மாந்துறையில் முஸ்லீம்களின் குடியிருப்புக்கள் வளர்ந்து வருவதின் அவசியத்தின் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியளவில் தக்கியாப் பள்ளி தோற்றம்பெற்றது. அன்றைய காலக் கட்டத்தின் சிறிய பள்ளியாக இருந்த படியால் "தைக்கியா" எனப் பெயர் பெற்றது. மத்ரஸா நடத்தப்பட்டு வந்த இடத்திலும் பள்ளியொன்று தேவைப்பட்டதால் அவ்விடத்தில் "மத்ரஸாப் பள்ளி" தோற்றம்பெற்றது. 1947 ஆம் ஆண்டளவில் இப் பள்ளி மையப்பெற்றதெனலாம். ஊரில் புதிதாக தோன்றிய பள்ளியாகையால் காலகெதியில் மத்ரஸாப்பள்ளி என்ற பெயர் மாற்றமடைந்து "புதுப்பள்ளி" என வழங்கலாயிற்று. இன்று "மஸ்ஜிதுல் உம்மா" என பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. சம்மாந்துறையின் அன்றைய மரைக்கார் சபை உறுப்பினராக இருந்த "கண்ணாடி மரைக்கார்" எனும் பெரியார் இவ்வளவை அன்பளிப்புச் செய்திருந்தார்.
சம்மாந்துறையின் குடியிருப்புக்கள் தெற்கு நோக்கி "ஜே புளக்" குடியேற்ற பிரதேசங்களிலும், மேற்கு, கிழக்கு நோக்கியும் விரிவடையத்தொடங்கின. இதன் நிமித்தம் செட்டிட வட்டையில் மஸ்ஜிதுல் ஸலாம், சம்புமடுவில் மஸ்ஜிதுல் அழ்பர், கைகாட்டியடியில் மஸ்ஜிதுல் ஜாரியா, விளினையடியில் மஸ்ஜிதுல் ஜலாலியா, வீரமுனைப் பகுதியில் மஸ்ஜிதுல் கைர், மட்டக்களப்புத் தரவையில் மஸ்ஜிதுல் நகர் என பள்ளிகளின் தொகைகள் விரிவடைந்து செல்லலாயின. இவ்வாறு பள்ளிகளின் தொகை 1980 களில் 25 பள்ளிகளாக இருந்த படியால் இவற்றின் நிருவாகத்தை ஒரேயமைப்பில் கொண்டுவரும் முயற்சியில் ஊர் பெரியார்களும், அன்றைய நம்பிக்கையாளர் சபையினரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக "மஜ்லிஸ் அஷ்ஷுரா" அமைப்பு 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் சகல பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும், குடிமரைக்கார்மார்களும், சமய, சமூக, கலாசார, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமும் இஸ்லாமிய கலாச்சாரமும்.
சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 44 பள்ளிவாசல்களையும் மற்றும் மத்ரசதுல் தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியும், அல் ஹசனாத் குர் ஆன் மனனக்கல்லூரியும் ஒரு நம்பி; க்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷ {ரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும ,; ஒவ்வொரு ஜமாஅத் நிறுவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷ {ராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷ {ரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.
கல்வி.
சம்மாந்துறையில் ஆரம்பப் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் வரை பலவகையான கல்விக்கூடங்கள் உள்ளன. அவையாவன:
தென் கிழக்குப் பல் கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவின் வளாகம்
சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி
தொழில் பயிற்சி நிலையம்
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்,
பல ஆரம்ப பாடசாலைகள்
பல உயர்தர பாடசாலைகள்
சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம். ]
ஆறு பொது நூலகங்கள்
விளையாட்டு
சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி
தொழில் பயிற்சி நிலையம்
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்,
பல ஆரம்ப பாடசாலைகள்
பல உயர்தர பாடசாலைகள்
சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம். ]
ஆறு பொது நூலகங்கள்
விளையாட்டு
பொது விளையாட்டு மைதானம் ஒன்றும், நீச்சல்தடாகம், உடல்வலுவூட்டல் நிலையம், பெட்மின்டன், மேசைப்பந்து, கூடைப்பந்து மைதானங்களுடன் ஜனாதிபதி விளையாட்டரங்கத் தொகுதி, பொது சிறுவர் பூங்காக்கள் மூன்று ஆகியன காணப்படுகின்றன.
தொழிற்துறைகள்.
பிரதான தொழில் நெல் விவசாயம், செங்கல் உற்பத்தி, நன்னீர் மீன்பிடி, கல்லுடைத்தல் மற்றும் சிறு கைத் தொழில்களும் உள்ளன.