காரைதீவு நிருபர் சகா.
டெங்கு ஆபத்துள்ள இடங்கள் பாடசாலைகளில் அடையாளம் காணப்பட்டால் பாடசாலை அதிபரின் பிரத்தியே நிதியிலிருந்தே தண்டப்பணம் செலுத்த வேண்டும் என சம்மாந்துறை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். நஜீம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை சூழலினை சுத்தமானதாகவும், டெங்கு நோய் பரவா வண்ணம் வைத்து கற்றலுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்துவது அதிபர்களின் பொறுப்பாகும் இது தவறப்படின் பிரதேச சுகாதார அதிகாரி குழு மூலம் பாடசாலைகளில் டெங்கு நோய் பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்படின் தண்டப்பணம் அதிபரின் பிரத்தியேக நிதியில் இருந்தே செலுத்தப்பட வேண்டி வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.