நன்றி - தானிஸ் மொஹமட்.
பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.. எனது அன்பார்த பிரதேச சபை வேற்பாளர்களே அஸ்ஸலாமுஅலைக்கும்.
எமது பிரதேசசபைக்கு உற்பட்ட இந்த சம்மாந்துறையின் பொதுமைதானம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் நாங்கள் பிரதேச சபை அனுமதி பெற்று ஒரு விளையாட்டு போட்டியினை நடாத்தும் போது அங்கு நாங்கள் எதிர் கொள்ளும் போட்டிக்கு சற்றும் ஒவ்வாத நிகழ்வுகளும்,காரணிளும் வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
1. இங்கு உள்ள படத்தில் சிறுவர்களுக்கான மாவட்ட சமபோச போட்டியின் போதே சில வாகனங்கள் குறுக்கிடுவதைக்கானலாம்.
2.பல குறுக்கான பாதைகள் ஒரு ஊர் பொதுமைதானத்தில் இருப்பது இங்கு மாத்திரமே.
3.பராமரிப்பு -0%
4.இவ்வளவு பெரிய ஊரில் கடினப்பந்து விளையாடுவதற்கான உரிய மைதானம் இன்மை.
5.வெளியில் செல்லும் பந்துகள் தரமறுக்கப்படுகிறமை.
6.இவ்வளவு காலமாகியும் விரர்களுக்கான ஒய்வு எடுக்கும் ஒரு பூரன நீர் வசதி கொண்ட கட்டடம் இல்லாமை.
7. வெளி ஊர் அணிகளை அழைத்து போட்டி நடத்துவதில் உள்ள சங்கடமான சூள்நிலைகள்.
மேற்படி விடயங்களின் மூலம் நான் யாரையும் குறை கூறவில்லை,இனிமேலாவது இவ்வாறான விடயங்களையும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கருத்தில் கொள்ளுமாறும் செயல்படுத்தித்தருமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
"ஒரு வளர்ச்சி அடைந்த ஊரின் முக்கிய அறிகுறியாக கல்வியுடன் கூடிய விளையாட்டு விளங்குகிறது" அழகிய வசதிபடைத்த மைதானத்தில் நடத்தப்படும் போட்டிகளால் பயன் அடைவது விளையாட்டு வீரர்கள் மாத்திரம் அல்ல ரசிகர்களும்,பிரமுகர்களும்தான்.
("என்னடா இவன் எப்பயும் விளையாட்டப்பத்தி மட்டும் பதிவிடுறான்னு நினைக்கிறது சரிதான், மத்த ஊர் அபிவிருத்தி விசயத்த பேசுறதுக்கு இங்க நிறையப்பேர் இருக்காங்க...விளையாட்டுக்கு நாம இருந்துட்டு போவம்")