நன்றி - இம்தாத் அப்துல் கரீம்.
காரைதீவு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் கழிவு சேகரிப்புத் திட்டம். இத்திட்டம் கல்முனை மாநகர சபையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் 85% வீத பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
இதில் உள்ள
சிறப்பம்சங்கள்..
1. ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவு சேகரிப்பதற்கான பைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
2. அவை ஒவ்வொன்றிலும் வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டு இலக்கம் குறிக்கப்பட்டுள்ளது.
3. உக்கும் கழிவு, உக்காத கழிவு என இரு வேறு சேகரிப்பு பைகள் வழங்கப்பட்டுள்ளன.
4. ஒவ்வொரு வாரத்திலும் வியாழக் கிழமைகளில் இக்கழிவுகளை எடுப்பதற்கு பிரதேச சபை ஊழியர்கள் வருகைதருகின்றனர்.
5. 3மாதங்களுக்கு ஒரு தடவை சேவைக் கட்டணமாக ரூபா 150/= அறவிடப்படுகின்றது.
இவ்வாறான சிறந்த முன்மாதிரியான திட்டத்தினை சம்மாந்துறை பிரதேச சபையினாலும் மேற்கொள்ளலாமே.
இவ்வாறான சிறந்த முன்மாதிரியான திட்டத்தினை சம்மாந்துறை பிரதேச சபையினாலும் மேற்கொள்ளலாமே.