காரைதீவு சகா.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் முன்னாள் கல்வி வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் துறையின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரான திருமதி எஸ்.என்.ஏ. றசூல் நேற்று காலமானார்.
சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரியாகவிருந்த ஜ.எ.றசூலின் மனைவியான திருமதி றசூல் 4பிள்ளைகளின் தாயாவார்.
மரணிக்கும்போது அவருக்கு வயது 57.
இன்று(16) காலை சம்மாந்துறை தைக்காப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.