By - Dr. Ziyad Aia
பாரிய அளவில் வட்டாரங்களை வென்ற கட்சி மண் கவ்வியது ஏன்?
அதிக வாக்குகள் பெற்ற கட்சிக்கு கூட ஒரே ஆசனங்கள்?
தமிழ் கூட்டமைப்பு Nomination Reject ஆகாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
இதே வாக்குகளுக்கு பழைய விகிதாசார முறை அமுலில் இருந்து இருந்தால் ஆசனங்கள் எப்படி அமைந்து இருக்கும்?
Definition:- Postmortem is Fact finding , Not Fault Finding.
Declaimer:- Official ஆக அறிவிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 34,291. But, வட்டார பிரிப்புகளோடு Unofficial ஆக 34262 என உள்ளது. இந்த வாக்குகளுக்கே வட்டார வாக்கு தகவல்கள் இருப்பதால் வித்தியாசப்படும் 29 வாக்குகள் புறக்கணிக்கபடுகிறது.
சம்மாந்துறை பிரதேச சபையின் மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள் = 44271
சம்மாந்துறை பிரதேச சபை இம்முறை செல்லுபடியாகும் வாக்குகள் = 34262
பாரிய அளவில் வட்டாரங்களை வென்ற கட்சி மண் கவ்வியது ஏன்?
முடிவடைந்த தேர்தலில் ACMC பல்தொகுதி வட்டாரம் உட்பட 5 வட்டாரங்களை வென்று (வட்டார ரீதியில்) 7 ஆசனங்கள்.
UNP (SLMC) 3 வட்டாரங்களை வென்று (வட்டார ரீதியில்) 3 ஆசனங்கள்.
SLFP 2 வட்டாரங்களை வென்று (வட்டார ரீதியில்) 2 ஆசனங்கள்.
இங்கே ACMC க்கும் , UNP (SLMC) க்கும் வட்டார வெற்றி வித்தியாசம் 5 க்கு 3 என்று இருந்தாலும் Postmortem Report 5 க்கு 5 என்றே காட்டுகிறது.
எப்படி?
இதனை இரண்டு கட்சிகளும் தோற்ற Malwattai , Valathaapitiya வட்டாரங்களை ஆராய்ந்தால் புரியும்.இங்கே 2 கட்சிகளும் தோற்று இருந்தாலும் அவை இரண்டையும் ஒப்பிட்டால் UNP (SLMC) ஆனது ACMC ஐ விட பாரிய வாக்கு வித்தியாசத்தை கொண்டுள்ளது. எனவே இவ்விரு வட்டாரங்களும் ஒப்பிட்டு ரீதியில் UNP (SLMC) வெற்றி.
இதனை இன்னும் உற்று நோக்கினால் வீரமுனை வட்டாரத்தில் ACMC பெற்றுக்கொண்ட அதிகப்படியான 1000 வாக்குகளை UNP (SLMC) ஆனது Malwattai (வித்தியாசம் 469) , Valathaapitiya (வித்தியாசம் 488) வாக்குகள் மூலம் சமன் செய்துள்ளது. இறுதியில் மட்டக்களப்பு தரவை வாக்கு வித்தியாசம் 384 வெற்றியை தீர்மானித்து உள்ளது.
அதிக வாக்குகள் பெற்ற கட்சிக்கு கூட ஒரே ஆசனங்கள்?
இத்தேர்தல் 60% வட்டாரம் 40% விகிதாசாரம் என்று கூறப்பட்டாலும் உண்மையில் 100% விகிதாசாரப்படியே ஆசனங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
ஆசனங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது? சம்மாந்துறை பிரதேச சபை செல்லுபடியாகும் வாக்குகள் = 34262 இதனை மொத்த ஆசனங்களான 20 ஆல் பிரிக்கும்போது 1713 (தகைமை பெறும் எண்) எனவே சம்மாந்துறை பிரதேச சபைக்கு நிர்ணயிக்கபடும் ஒரு ஆசனத்தை உறுதி படுத்துவதட்கான அதிக பட்ச வாக்குகள் 1713. இதனை கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளுக்கு பிரயோகித்து பார்த்தால்:-
UNP (SLMC):- பெற்ற மொத்த வாக்குகள் = 13022
இதனை 1713 ஆல் வகுக்கும்போது வருவது 7 உம் மீதி 1031 வாக்குகளும்.
So, முதல் கட்ட விகிதாசார படி கட்சி UNP (SLMC) க்கு 7 ஆசனங்கள் உறுதி செய்ய பட வேண்டும். ஏற்கனவே இக்கட்சி தொகுதி வாரியாக 3 ஆசனங்களை உறுதி செய்து இருப்பதால் விகிதாசார bonus ஆசனம் 4 செல்லும். (இது பல்தொகுதிக்கு வைக்கப்பட்ட ஆப்பு)
இதேபோல் ACMC: பெற்ற மொத்த வாக்குகள் = 12911 இதனை 1713 ஆல் வகுக்கும்போது வருவது 7 உம் மீதி 920 வாக்குகளும். So, முதல் கட்ட விகிதாசார படி கட்சி ACMC க்கு 7 ஆசனங்கள் உறுதி செய்ய பட வேண்டும்.
ஏற்கனவே இக்கட்சி தொகுதி வாரியாக 7 ஆசனங்களை உறுதி செய்து இருப்பதால் விகிதாசார bonus இல்லை.
(இத்தேர்தலில் வட்டார வெற்றி ஒரு பொருட்டு அல்ல. மொத்த வாக்குகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் )
SLFP :- பெற்ற மொத்த வாக்குகள் = 6932 இதனை 1713 ஆல் வகுக்கும்போது வருவது 4 உம் மீதி 80 வாக்குகளும். So, முதல் கட்ட விகிதாசார படி கட்சி SLFP க்கு 4 ஆசனங்கள் உறுதி செய்ய பட வேண்டும்.
ஏற்கனவே இக்கட்சி தொகுதி வாரியாக 2 ஆசனங்களை உறுதி செய்து இருப்பதால் விகிதாசார bonus ஆசனம் 2 செல்லும். SLPP (மொட்டு):- பெற்ற மொத்த வாக்குகள் = 754 இதனை 1713 ஆல் வகுக்கும்போது வருவது 0 உம் மீதி 754 வாக்குகளும். So, ஆசனங்கள் இல்லை.
JVP :- பெற்ற மொத்த வாக்குகள் = 500
இதனை 1713 ஆல் வகுக்கும்போது வருவது 0 உம் மீதி 500 வாக்குகளும். ஆசனங்கள் இல்லை. மேற்சொன்ன கணக்கு படி Bonus 8 இல் 6 பகிரப்பட்டு உள்ளது. மிகுதி 2 ஐயும் எஞ்சியுள்ள வாக்குகளில் அதிக வாக்குகளை பெற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும்.
எஞ்சிய வாக்குகள்
UNP (SLMC) = 1031, ACMC = 920, SLPP=754, JVP=500, SLFP=80
So, இறுதி 2 ஆசனங்களில் UNP (SLMC) ஒன்றும் ACMC க்கு ஒன்றும் வழங்கப்படும்.
எனவே இறுதி முடிவு
UNP (SLMC) = 8 ஆசனங்கள் (தொகுதி 03, போனஸ் 05)
ACMC = 8 ஆசனங்கள் (தொகுதி 07, போனஸ் 01)
SLFP= 4 ஆசனங்கள் (தொகுதி 02, போனஸ் 02)
தமிழ் கூட்டமைப்பு Nomination Reject ஆகாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
வீரமுனை வட்டாரத்தில் தமிழ் Area வில் பெட்டி கொட்டி பார்த்ததில் தமிழ் வாக்குகளின் எண்ணிக்கை தகவலுக்கு ஏட்ப இக்கணிப்பு. அளிக்கப்பட தமிழ் வாக்குகள் 1200 இல் ACMC க்கு 900, SLFP 250, UNP (SLMC) 50 (வரலாறு தகராறு செய்திருக்கிறது.)
எனவே TNA க்கு வாக்குகள் திருப்ப பட்டிருந்தால் அது ACMC வாக்கு வங்கியை சரித்து இருக்கும் என்பது யதார்த்தம். எனவே TNA ஆனது ACMC க்கு இடப்பட்ட 900 வாக்குகளில் வெறும் 500 யாவது தன் பக்கம் திருப்பி இருந்தால்
கடைசி இரு Bonus Seats எவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கும்.
UNP (SLMC) = 1031, ACMC (920 - 500) = 420, SLPP=754, JVP=500, TNA = 500, SLFP=80
எனவே முன்புபோல் UNP (SLMC) க்கு ஒன்றும் 754 மிகுதியை கொண்டுள்ள SLPP (மொட்டுக்கு) ஒன்றும் சென்று இருக்கும்.
ஆகவே இறுதி முடிவு
UNP (SLMC) = 8 ஆசனங்கள் (தொகுதி 02, போனஸ் 05)
ACMC = 7 ஆசனங்கள் (தொகுதி 07, போனஸ் 00)
SLFP= 4 ஆசனங்கள் (தொகுதி 02, போனஸ் 02)
SLPP= 1 ஆசனம் (தொகுதி 00, போனஸ் 01)
TNA ஆனது மொத்தமாக 800 க்கும் அதிகமாக வாக்குகள் பெற்றால் SLPP க்கு ஆசனம் செல்லாமல் TNA க்கே சென்று இருக்கும். தமிழ் மக்கள் சனத்தொகையை கருத்தில் கொள்ளும்போது இது மிக குறைவான வாக்குகள். எனவே malwatta , Valathaapitiya போன்ற பகுதிகளையும் சேர்த்து 3000 க்கு கிட்ட வாக்குகள் பெறும்போது 2 seats கிடைக்கும் வைய்ப்பு உண்டு. எனவே அந்த நேரம் தமிழ் வாக்குகளால் ஆசனம் பெற்ற SLFP ஒரு போனஸ் ஆசனத்தை இழக்க வேண்டி வரும்.
முடிவாக கூட்டமைப்பு Election கேட்டு இருந்தால் அதட்கு கிடைக்கும் 1வது ஆசனத்துக்கு ACMC யும் , 2வது ஆசனத்துக்கு SLFP யும் 3 வது ஆசனத்துக்கு UNP யும் இழக்க வேண்டி வரும்.
இதே வாக்குகளுக்கு பழைய விகிதாசார முறை அமுலில் இருந்து இருந்தால் ஆசனங்கள் எப்படி அமைந்து இருக்கும்?
வெற்றி பெரும் கட்சிக்கு 2 ஆசனங்கள் முதலில் Bonus ஆக வழங்கப்படும்.
பழைய Rule படி மொத்த வாக்குகளில் 5% குறைவான வாக்குகளை பெற்ற கட்சி or சுயேட்சை குழுவின் வாக்குகள் கருத்தில் கொள்ள படாது. எனவே சம்மாந்துறை பிரதேச சபை செல்லுபடியாகும் வாக்குகள் = 34262 5% ஆன வாக்குகள் 34262 X 0.05 = 1713 ( எனவே 1713 க்கு குறைவாக வாக்குகள் பெரும் கட்சிக்கு ஆசனம் செல்லாது)
UNP (SLMC):- பெற்ற மொத்த வாக்குகள் = 13022
ACMC: பெற்ற மொத்த வாக்குகள் = 12911
SLPP (மொட்டு):-பெற்ற மொத்த வாக்குகள் = 754
JVP :- பெற்ற மொத்த வாக்குகள் = 500
So, SLPP உட்பட அதட்கு கீழ் உள்ள கட்சிகளின் வாக்குகள் கருத்தில் கொள்ள படாது.
முடிவுகளின் படி 111 அதிக வாக்குகளால் வெற்றி பெற்ற கட்சி UNP (SLMC) முதலில் 2 ஆசனம் வழங்கப்படும். மிகுதி 18 ஆசனங்களே விகிதாசாரத்தில் பிரிக்கப்படும்.
(விரிவஞ்சி சுருக்கமாக விளக்கப்படுகிறது)
விகிதாசார தகைமை எண் = (13022+12911+6932) / 18 = 32865/18 = 1825
UNP (SLMC) = 13022/1825 = 7 மீதி 247
ACMC = 12911/1825 = 7 மீதி 136
SLFP = 6932/1825 = 3 மீதி 1457
எனவே வெற்றி பெற்றதும் வழங்கப்பட்ட 2 ஆசனங்களோடு 19 ஆசனங்கள் வழங்கப்பட்டு விட்டன.
கடைசி ஆசனம் மிகுதியில் அதிக வாக்குகளை SLFP க்கு வழங்கப்படும்.
So, SLFP க்கு ஒன்றும் ,SLPP (மொட்டு) க்கு ஒன்றும் வழங்கப்படும்.
ஆகவே இறுதி ஆசனங்கள்
UNP க்கு = 9 (வெற்றியால் கிடைத்த 2 ஆசனத்தோடு)
ACMC = 7, SLFP = 4
Take Home Message:-
வட்டார வெற்றியை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு வெடில் கொழுத்த கூடாது. புதிய தேர்தல் முறை வெற்றி பெறும் கட்சிக்கு பாதகமானது.
"சம்மாந்துறை பிரதேச சபையை பொறுத்த வரை பல்தொகுது வட்டாரம் உட்பட 9 வட்டாரங்களை ஒரே கட்சி வெற்றி பெறாத வரை வட்டார வெற்றி குப்பை தொட்டியில். மொத்த வாக்குகள் தான் ஆசனங்களை தீர்மானிக்கும். இந்த Concept புரியவில்லை என்றால் வெறும் உளரல்கள் மட்டும்தான் மிஞ்சும்."
இது தான் களா கத்ர் (God is Great)
Ziyad Aia
Ziyad Aia
Ziyad Aia