Mohamed Sahabdeen
பிரதேசசபைத் தேர்தலாக இருந்தாலும், மாகாண சபைத் தேர்தலாக பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் நமது சமூகம் தங்களது வாக்குரிமையை கீழ்க்காணும் முறைகளின் அடிப்படையில்தான் வழங்குகின்றார்கள்.
01. ஒருவர் செய்த சேவைக்கும் / கொடுத்த தொழிலுக்கும் நன்றிக்கடன் செலுத்துதல்.
02. பிரதேசவாதம், இனவாதம் மற்றும் ஊர் வாதத்தை மையமாக கொண்ட அரசியல் மோகத்தில் வாக்களித்தல்.
03. ஆக்ரோஷமான, கோஷங்களை அடிப்படையாக கொண்ட பேச்சுக்கு அடிபணிந்து வாக்கிடுதல்
04. ஒருவர் மீதுள்ள வெறுப்பினால் அடுத்தவருக்கு வாக்கிடுதல்
05. எது எப்படி இருப்பினும் சமூக ஒற்றுமைக்காக மாத்திரமே வாக்கிடுதல்
06. கொள்கையிலும், இலட்சியத்திலும் உறுதியாக இருந்து திட்டமிட்ட ஒழுங்கில் சமூகத்துக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்யும் அரசியல் ஒழுங்கிக்கு வாக்கிடுதல்.
நம் சமூகத்தில் மேற்குறிப்பிட்ட 01 தொடக்கம் 05 வரையான நோக்கத்தின் அடிப்படையில் வாக்களிக்கும் மனோநிலை கொண்ட மக்களே அதிகம் காணப்படுகின்றனர்.
05, 06 மக்கள் ஒன்றாக இணைந்து கட்டமைப்பை சீர்செய்யும்போது அழகிய முன்மாதிரியான சமூக அரசியலை கட்டியெழுப்ப முடியும். இதேவேளை அடுத்தவர்களும் இணைந்து செயற்படுவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து .
அத்தோடு இவற்றை சாத்தியப்படுத்தும் ஒழுங்குகள் பற்றி சிந்திப்பதும், அமுலுக்கு கொண்டுவருவது பற்றிய ஒருமித்த கருத்து, போக்கும் எம்மிடையே இருப்பது அடிப்படையானது