தாய்லாந்தின் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.6 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டதில் சம்மாந்துறை கோரக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் போட்டியிட்டு சர்வதேச வெண்கல விருதையும் உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் "சர்வதேச ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சிறப்பு விருது" ஐயும் பெற்றுக் கொண்டார்.
இவ் விருது "கணித உதவியாளன்" எனும் கணித பாடத்தை இலகுவாக கற்க உதவும் கண்டுபிடிப்புகே வழங்கப்பட்டது. தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை கமு/சது கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர்தரத்தினை சம்மாந்துறை கமு/ சது/ சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார்.யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கும் இவர் இதுவரை 81 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளதோடு, 31 தேசிய விருதுகளையும், 3 சர்வதேச விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
சோமசுந்தரம் வினோஜ்குமார் தனது கலாச்சார ஆடையான வேஷ்டி அணிந்து கொண்டு இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார். விருதினைப் பெற்று நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு இலங்கை விமான நிலையத்தில் கௌரவம் அளிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.