Ads Area

அகமட் றிக்காஸ்க்கு உதவ சம்மாந்துறையில் ஒருவர் 100 ரூபா வீதம் வழங்கினாலும் போதுமானது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில்  526/2, கோட்டுப் போடியார் லேன் (நூர்ப் பள்ளி மகல்லா) எனும் முகவரியில் வசித்துவரும் 21 வயதுடைய அகமட் றிக்காஸ் எனும் சகோதரனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயழிலந்துள்ளதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr. றுஸ்தி நிஸாம் கூறியுள்ளார்....இவரது இரு சிறுநீரகங்களையும் அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்வதற்கு ரூபா 40,00,000/- (நாற்பது இலட்சம்) தேவையென வைத்தியர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. 

 4  பெண்  சகோதரிகளுக்கு சகோதரனாக   இருக்கும் இச்சகோதரனின் தகப்பன் வயது முதிர்ந்த நிலையில் உள்ளதால் கூலித் தொழில் செய்து வருகின்றார்... குடும்பத்தினரால் தனிமையில் இவ்வாறானதொரு பாரிய நிதியினை திறட்டுவதற்கு இவர்களால் இயலாத நிலையில் நல்லுள்ளங்கொண்ட நம்மை நாடியுள்ளனர். தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இச்சகோதரனின்  உடல் ஆரோக்கியம் மாறுவதற்குள் மூன்று மாதங்களுக்குள் (பெப்ரவரி - ஏப்ரல்) அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இச்சகோதரனின் உயிரைக்காக்க நம் அனைவராளும் முடியுமான நிதிகளை வழங்கி  சகோதரனின் உயிரை காப்பாற்ற உதவுவதுடன், இவருக்காக இறைவனிடத்தில் அனைவரும் பிரார்த்திப்போமாக.

தொடர்புகளுக்கு

சகோதரன் - 077 1775951, 077 5027770 

வங்கி கணக்கு இலக்கம்

I.L.அப்துல் நசீர்
6107828
இலங்கை வங்கி
சம்மாந்துறை.

சம்மாந்துறையில் இம்முறை நடைபெற்று முடிந்த தேர்தலில் சுமார் 40000 - நாற்பது ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளது ஆக...ஒருவருக்கு தலா 100 ரூபா வீதம் வழங்கினால் கூட அந்த சகோதரரின் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான 40,00,000/- (நாற்பது இலட்சம்) வந்துவிடும் என கட்டார் நாட்டில் பொறியியலாளராக பணிபுரியும் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். இம்றியாஸ் என்பவர் குறிப்பிட்டிருந்தார் இது சிந்திக்கக் கூடிய விடையமும் கூட.

சம்மாந்துறையில் உள்ள ஏதாவது ஒரு சமூக சேவை அமைப்பினர் குறித்த இந்த சகோதரருக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கலாம்...இவரது நிலையினை அனைத்து பள்ளிவாசல்கள் ஊடாக ஊர் மக்களுக்கு அறிவித்து ஒவ்வொரு வீடு வீடாக நிதியினைத் திரட்டி குறித்த இந்த சகோதரரின் உயிரைக் காக்க முயற்சிக்கலாம் அல்லவா...?? எந்த சமூக அமைப்பாவது முன் வருவீர்களா...???
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe