Ads Area

சம்மாந்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.பாறூக் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு.



காரைதீவு  நிருபர் சகா

தனது 60 வருடகால வாழ்வியல் வட்டத்தில் 41வருடகாலத்தை  கல்விச்சேவைக்காக அர்ப்பணித்து  களங்கமில்லாமல் அக்காலத்தைப் பூர்த்திசெய்த எமது பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.பாறூக் நமக்கெல்லாம் ஒரு உதாரண புருசராகத் திகழ்கின்றார்.

சம்மாந்துறைவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.பாறூக் 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதனையொட்டி இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் பேசிய வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்வு வலய கல்விசார் உத்தியோகத்தர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டு நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் அகமட்கியாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் பிரியாவிடைபெறும் பாறூக்கின் துணைவியார் திருமதி சல்மா பாறூக்கும் கலந்து சிறப்பித்தார்.

முன்னதாக பணிப்பாளர் பாறுக்கின்சேவையை  வியந்து பாராட்டிப்பலரும் உரையாற்றினர். கவிதை பாடல்களும் இடம்பெற்றன.

வலயம்சார்பில் பணிப்பாளர் நஜீமும் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் சார்பில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சக பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் சார்பில் செல்வி வி.நிதர்சினியும் பொன்னாடைகளை போர்த்திக் கௌரவித்தனர்.

அங்கு பணிப்பாளர் நஜீம் மேலும் உரையாற்றுகையில்:

தனது சேவைக்காலத்தில் ஜனாப் பாறூக் யாருடனும் முரண்பட்டதுகிடையாது.ஏசியதும் கிடையாது. மென்சுபாவம்கொண்ட அவர் சகலருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொண்டார். நிருவாகத்திற்கு மிகுந்த உறுதுணையாகவிருந்தார். 

நாவிதன்வெளி கோட்டக்கல்விப்பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டபோது எனது ஆலோசனையை மறுவார்த்தையின்றி ஏற்றுக்கொண்டு நிலைமையை சுமுகமாக்கியதை இன்றும் மறக்கமுடியாது.

அவர் 10வருடங்கள் ஆசிரியராகவும் 26வருடங்கள் அதிபராகவும் 05வருடங்கள் கல்வி நிருவாகசேவை அதிகாரியாகவும் கல்விப்புலத்தில் சேவையாற்றியிருந்தார். அவரது பிரிவு பெரும் இடைவெளியை ஏற்படுத்தும் என்பதில் ஜயமில்லை. இருந்தும் காலத்தின்விதி அனைவருக்கும் பொதுவானது. அன்புக்கு இலக்கணமான அவரும் அவர்தம் குடும்பத்தினரும் நல்ல ஓய்வுடன் பிற்காலவாழ்க்கையில் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் என்றார்.

அனைத்து உத்தியோகத்தர்களும் அவரை ஆரத்தழுவி விடைகொடுத்தார்கள்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe