தகவல் - மொஹமட் றிஸ்வான் (ஆசிரியர்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A மற்றும் 8A சித்திகளைப் பெற்ற 25 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லுாரி அதிபரின் தலைமையில் இன்று (2018-04-09) கல்லுாரி வளாகத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து வாழ்த்துக்கள் கூறி கௌரவம் வழங்கப்பட்டது.