தகவல் - றிசாட் எம் புகாரி.
இன்று (13/05/2018) சம்மாந்துறையில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் அவர்கள் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.
இச் சந்திப்பில் ஒரு சில போரினவாத குழுக்களுடன் இணைந்து குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் ஊடகங்கள் மூலம் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஊடக இனவாதம் தொடர்பாக மக்கள் விடுதலை முண்ணனியின் சம்மாந்துறை தொகுதி உறுப்பினர் றிசாட் எம் புகாரி அவர்களால் விஜித ஹேரத் அவர்களிடத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தோழர் விஜித ஹேரத் அவர்கள்
இந்த நாட்டில் எந்த இனத்திற்கும் எதிரான இனவாத வன்முறைகளைத் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் கூடிய விரைவில் இத்தகைய இனவாதங்களுக்கு முடிவுகட்டும் வேலைத்திட்டத்தினை சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர் என அனைத்து இன மக்களின் பங்களிப்புடனும் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் இச்சந்திப்பில் சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், விவசாயக் காணிகள் வணவிலங்கு பாதுகாப்பிடமாக அறிவிக்கப்படுவது மற்றும் நெல் வயல்களுக்கான அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் கரும்புச் செய்கை பன்னுமாறு வற்புறுத்தப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பிரதேச மக்களை சந்தித்து சிநேகபூர்வமான முறையில் உரையாடிய அவர் உரமானியம் பெறுவதில் உள்ள பிரட்சினைகளுக்கு கட்சியென்ற முறையில் விவசாயிகள் சார்பில் தொடர்ந்தும் போராடுவதாக வாக்குறுதியளித்தார்.