முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் சம்மாந்துறை புளக் ஜே மேற்கு -02 கைகாட்டி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவுக்கான வேலைத்திட்டம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம்(ஜனாப்) அவர்களும் கலந்துகொண்டனர்.