செய்தி - அன்சார் காசீம்
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் தொல்பொருள் இடமென தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகளினால் எல்லைகள் இடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதயையடுத்து, அப்பணிகள் தற்காலிமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் தொல்பொருள் இடமென தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகளினால் எல்லைகள் இடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதயையடுத்து, அப்பணிகள் தற்காலிமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் முயற்சியின் காரணமாக, இவ்வெல்லைகள் இடும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டது.
புதிய வளத்தாப்பிட்டி ஆண்டிராயன் கனத்தை எனும் பிரதேசத்தையும் அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணியில் புராதன குடியேற்றங்களின் எச்சங்கள் காணப்படுவதாக காரணம் காட்டி இப்பிரதேசம் பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் இடமென தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகளினால் தெரிவித்து இக்காணிப்பகுதியில் எல்லைக் கற்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காணி உரிமையாளர்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் கவனத்திற்கு கொண்டுவந்தனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ. வணிகசிங்க மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஹம்மட் ஹனீபா ஆகியோரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பு கொண்டு இதனைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதினையடுத்து சம்மாந்துறை பிரதேச உதவிச் செயலாளர் எம்.எம். ஆஷீக் தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு சென்று தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகளுடான பேச்சுவார்த்தையினையடுத்து தற்காலிகமாக எல்லைக் கற்கள் நடும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், பிரதேச உதவிச் செயலாளர் எம்.எம். ஆஷீக், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷீறாவின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், காணி மேம்பாட்டு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.அனஸ், கிராம சேவை உத்தியோகத்தர் கே.ரவி, சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ஏ. இப்றாஹீம் மற்றும் காணி உரிமையாளர் ஆகியோர்கள் குறிப்பிட்ட பிரதேத்திற்கு விஜயம் செய்து இப்பிரதேசங்களை பார்வையிட்டனர்.
இதனையடுத்து இப்பிரதேச காணி உரிமையாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார். இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளுடன் பேசி தீர்வினைப் பெற்றுத்தருவாக வாக்குறுதியளித்தார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குள் தொல் பொருளியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஒன்பது இடங்கள் இத்திணைக்களத்தினால் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவ்இடங்களுக்கு எல்லை இடும் முதற்கட்ட பணியாக புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.
குறித்த இடங்களுகளிலிருந்து திணைக்கள அதிகாரிகள் தற்காலிமாக நிறுத்தினாலும் எமது பரம்பரையினர் வாழ்ந்த இடங்களுக்கு நேர்ந்தள்ள அச்சுறுத்தலாக கருத வேண்டியுள்ளது.
யுத்தம் முடிவுக்கு வந்தனையடுத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை மக்களின் காணிகளை வன பாதுகாப்பு , வனஜீவராசிகள் மற்றும் தொல்பொருளில் திணைங்கங்களின் ஊடான கபளீகரம் செய்யும் நடவடிக்கள் பரவலாக அரசின் உதவியோடு பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை துரித மேற்கொண்டு தீர்வினைத் பெற்றுத்தர வேண்டும். இல்லையெனின் அரசுக்கான ஆதரவினை முஸ்லிம் காங்கிரஸ் பரிசீலிக்க வேண்டிய நிலமை ஏற்படும். என்றார்.